கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!!

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் ராமேஸ்வரத்தில் மூன்று நாள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகை…

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் ராமேஸ்வரத்தில் மூன்று நாள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ்
பாலூட்டியான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், என மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் பணிகளில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 28ந்தேதி உலக கடல் பசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை தொடர்ந்து, அழிவின் தருவாயில் உள்ள கடல் வாழ் பாலூட்டி இனமான கடல் பசுவை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், இந்திய வனவிலங்கு நிறுவனம் மூன்று நாள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்த திட்டமிட்டு, குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.

இந்த வாகன பேரணி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை
வழியாக மூன்று நாள் பயணித்து தஞ்சை மாவட்டம் மனோரா கடற்கரைக்கு சென்றடைகிறது.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.