சத்தீஸ்கரில் சாலை விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

ராய்ப்பூர் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்து கொண்டு, இரவு 12.15 மணியளவில் மினி லாரியில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிரெய்லருடன் மோதியதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.