உத்தரகாண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், டெல்லி சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது சொந்த ஊரான ரூர்கி அருகே விபத்தில் சிக்கினார். டெல்லி – டேராடூன் சாலையில் அவர் சென்ற கார், சாலைத் தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விபத்து நடைபெற்றபோது காரில் தனியாக சிக்கிக் கொண்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ரூர்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர் டேராடூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியதால் அதிர்ச்சியடைந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்த படத்தை பகிர்ந்து தங்கள் வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.