பேய்க்கே பேன் பார்த்த மூன்று பேரின் கதை தான் ரிப்பப்பரியா?

பேய் படங்கள் என்றாலே நமக்கு நியாபகத்துக்கு வருவது காஞ்சுரிங்களும், காஞ்சானக்களுமே. பலவை நமக்கு சிரிப்பலைகளை கொடுக்கும், சில நமக்கு பயத்தை கொடுக்கும். அந்த வரிசையில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள ரிப்பப்பரி படம் எப்படி…

பேய் படங்கள் என்றாலே நமக்கு நியாபகத்துக்கு வருவது காஞ்சுரிங்களும், காஞ்சானக்களுமே. பலவை நமக்கு சிரிப்பலைகளை கொடுக்கும், சில நமக்கு பயத்தை கொடுக்கும். அந்த வரிசையில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள ரிப்பப்பரி படம் எப்படி இருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சாப்பாடு வெறி, கல்யாணம் ஆகாமல் இறந்த நபர்களின் ஆவிகள், அவ்வளவு ஏன் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டவர்களின் ஆவிகளை கூட பார்த்து உள்ளோம். ஆனால், இங்கு சாதிவெறி கொண்ட ஒரு பேயைப் பிடிக்க மூன்று இளைஞர்கள் புறப்படுகின்றனர். அவர்கள் பேயை பிடித்தார்களா அல்லது பேய் அவர்களை பிடித்ததா என்பது தான் கதையின் சாரம்சம்.

இப்படம் பல வகையான கதையம்சம் கொண்ட கலப்படமான திரைப்படமாகும். ரிப்பப்பரி படத்தின் முக்கிய சொதப்பல் அதன் சீரற்ற எழுத்து. ஸ்கிரிப்டில் கவனம் செலுத்தாது படத்தை பார்ப்போருக்கு புரிதலை கடினமாக்குகிறது. திகில் நகைச்சுவை படங்கள், அதன் பார்வையாளர்களை மகிழ்விக்க பல லாஜிக் மீறல்களை கடைபிடிக்கின்றனர். இ ப்படங்களின் வெற்றியானது, அவை பார்வையாளர்களுடன் ஒரு தொடர்பை எவ்வளவு நன்றாக ஏற்படுத்த முடியும் என்பதைப் பொறுத்து இருக்கும்.

அவ்வகையில் இப்படத்தை அருண் கார்த்திக் இயக்கி சாதி போன்ற சமூக பிரச்சனையை தொட முயற்சித்துள்ளார். ஆனால் படம் அவ்வப்போது மட்டும் தான் பார்வையாளர்களை திருப்திப்படுத்துகிறது. சாதியை மீறி திருமணம் செய்ய திட்டமிடும் ஒரு காதல் ஜோடியை பேய் கொல்வதில் படம் தொடங்குகிறது. அப்பேயை, மூன்று இளைஞர்கள், இறந்த போலீஸ் நாயின் ஆவி கொண்ட குரங்கு பொம்மையை, பயன்படுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

கதை நாயகனான சத்யராஜ் (மகேந்திரன்), அந்த பேய் தனது காதலியின் (ஆரத்தி பொடி) சகோதரன் என்பதையும், அதன் அடுத்த இலக்கு, தான் தான் என்பதையும் கண்டுபிடிகிறான். பிறகு சத்யராஜும், அவனது நண்பர்களும் பேயின் பிடியில் இருந்து, தப்பிக்க முயல்வதே கதை. படத்தில் பேயின் தீய தன்மையைக் காட்டுவதிலும், காதல் மற்றும், நகைச்சுவையின் பல காட்சிகளின் மீது, பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை.

படத்தின் இரண்டாம் பாதி, இதுதான் கதை என நாம் புரிந்து கொள்ளும்போது, ​​அது உணர்ச்சிகரமான பாணியில் கொண்டு செல்கிறது. அனைத்து வகையான காட்சிகளும் இறுதியில் ஒன்று சேருகையில் பல நிகழ்வுகள் தற்செயலாகத் தோன்றும்.

ரிப்பப்பரியின் முக்கிய பிரச்சினை அதன் சீரற்ற எழுத்து. படத்தின் கதையில் கவனம் செலுத்தாததால் கதையை புரிந்துகொள்வது கடினமாகிறது. ஹாரர் த்ரில்லர் படமாக இல்லாமல் ஸ்பூஃப் (Spoof) என குறியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும். இருந்தபோதிலும், படத்தின் இயக்கம் பாராட்டுக்குரியது மற்றும் இயக்குநரின் தனித்துவமான சிந்தனைகள் உச்சக்கட்ட காட்சிகளில் பிரகாசிக்கின்றன.

மாஸ்டர் மகேந்திரனின் பிரமிக்கவைக்கும் பெர்ஃபாமன்ஸ் படத்தில் மிகவும் ஈர்க்கக் கூடியவையாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் பெரும்பாலும் தோன்றும் கதாநாயகியின் சகோதரர் உட்பட துணை நடிகர்களும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக யூடியூப் பிரபலம் மாரி மற்றும் இதில் பேய் கதபாத்திரத்தில் கலக்கியுள்ள நடிகர் ஸ்ரீனி, பெண் கதாபாத்திரங்களான ஆரத்தி மற்றும் காவ்யா ஆகியோருக்கான ஸ்கிரீன் ப்ரசன்ஸ் மிகவும் கம்மியாக இருந்தாலும், மனதில் நிற்கும் அளவுக்கு அழுத்தமான நடிப்பாற்றலை விதைத்து விட்டு சென்றுவிட்டனர்.படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் பிரமிக்க வைக்கின்றன, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரண்டும் இந்த படதிற்கு பெரிய தூண்கள். இப்படத்தை குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். பாப்கார்ன் சாப்பிட்டும் பல நிமிடங்கள் சும்மாவே அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே செகண்ட் ஆஃபின் லெந்த்தை சிறிது குறைத்து இருக்கலாம்.. ஒரே வார்த்தையில் இந்த படத்தை பற்றி கூறவேண்டும் என்றால், பிள்ளைகளுடன், இந்த பேய் படத்தை பார்க்க பிரமிப்பாக இருக்கும். ஒரே ஒரு சின்ன குறை தான், காஷ்மிரில் ஆரம்பித்து, கன்னியாகுமரியில் முடிவது போல, கதையை என்கெங்கோ கொண்டு சென்று முடிக்கின்றனர், ஆக இது ஒரு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி தான்.

– பிரவீன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.