உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது சட்ட விரோதமானது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஓட்டல்களில் உணவு கட்டணம் மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், விரைவில் சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை நேற்று முன்தினம் கூறியிருந்தது. இந்தநிலையில், நேற்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,
அண்மைச் செய்தி: ‘காக்கா கூட்டம் அல்ல அதிமுக – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ’
ஓட்டல்கள், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டதற்கான உணவு தொகையில் சேவை கட்டணத்தை சேர்க்கக்கூடாது. தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால், உணவு பொருட்களின் விலையை உயர்த்திக்கொள்ளலாம். ஏனென்றால், நாட்டில் விலை கட்டுப்பாடு கிடையாது. அதை விட்டுவிட்டு, சேவை கட்டணம் என்ற பெயரில், வாடிக்கையாளர்களின் தலையில் அந்த சுமையை சுமத்தக்கூடாது என தெரிவித்த அவர், ஊழியர்களின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி “டிப்ஸ்” தனியாக வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், உணவகங்கள் விதிக்கும் சேவைக் கட்டணம் குறித்து நுகர்வோரிடம் இருந்து அரசுக்கு புகார்கள் வருவதாக கூறிய மத்திய அமைச்சர், “ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் கட்டணத்தை உயர்த்த நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். ஆனால், மறைமுக செலவு இருந்தால், உண்மையான விலை மக்களுக்கு எப்படி தெரியும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








