அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விவரங்களை சேகரித்து அவர்களை அரசு தொடக்கப்…

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விவரங்களை சேகரித்து அவர்களை அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டம், 7.5% உள் இட ஒதுக்கீட்டின் பலன், நலத்திட்ட உதவிகள், ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை உள்ளிட்ட திட்டங்களின் பலன்கள் பற்றி எடுத்துரைத்து அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ப்ளக்ஸ் பேனர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆட்டோ, சுவரொட்டிகள், விளம்பரங்கள் மூலம் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் சேர முன்வரும் குழந்தைகளுக்கு Spot Admission மூலம் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.