முக்கியச் செய்திகள் தமிழகம்

காக்கா கூட்டம் அல்ல அதிமுக – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

முருகன் வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி, பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேட்டியளித்த அவர், மதுரை மாநகராட்சி ஆணையர் மிக வேகமாக செயல்பட வேண்டும் எனவும், மாநகராட்சி வருவாயை அதிகப்படுத்த ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், வீட்டுவசதி வாரியத்தில் இருந்து மாநகராட்சிக்கு ஏறத்தாழ 300 கோடி அளவிற்கு வருவாய் வர வேண்டி உள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தெப்பகுளத்தில் லேசர் ஒளி – ஒலி காட்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரையில் 13 இடங்களில் சுற்றுலா மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரையில் மேயருக்கு இணையாக சூப்பர் மேயரை திமுக நியமனம் செய்துள்ளது. மேயருக்கு இணையாக ஒருவரை நியமிக்க சட்டரீதியாக இடம் இல்லை என கூறிய அவர், நல்ல மேயர் தேர்வு செய்யப்பட்டால் மேயருக்கு ஆலோசகர் தேவையில்லை. ஆலோசனை சொல்ல மாநாகராட்சி மாமன்ற உறுப்பினர் உள்ளனர் என தெரிவித்தார். மேலும், கழிவு நீர் தேங்கும்போது அதனை, அகற்ற உரிய கருவிகள் மாநகராட்சியிடம் இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்த முன்னாள் அமைச்சர், உரிய உபகரணங்களை மாநகராட்சி வாங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அண்மைச் செய்தி: ‘ஆசிரியர்கள் பற்றாக்குறை; பணி நியமனம் – அமைச்சர் அன்பில் மகேஷ்’

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள் என தெரிவித்த அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், பிரதமர் சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். பெண்களுக்கு இலவச பேருந்துகள் முறையாக இயக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த அமைச்சர், மத்திய அரசிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அண்ணாமலை கூறி வருவதாக தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெறுகிறது எனவும், தமிழ்நாட்டில் மக்கள் பணியை அதிமுக செய்கிறது என கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில், தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி என தெரிவித்தார். அதிமுக காக்கா கூட்டம் அல்ல என தெரிவித்த அவர், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தாயாரா என கேள்வி எழுப்பினார். மேலும், அனைத்து கட்சிகளும் போட்டியிட தயார் என்றால் அதிமுக தனித்து போட்டியிட தயார் என கூறிய அவர், தன்னுடைய கருத்தை இபிஎஸ், ஒபிஎஸ் ஏற்றுக்கொள்வார்கள். முருகன் வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது, இதனால், பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா? என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால் நாங்கள் தூணை கொண்டு எறிவோம் என காட்டமாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள். வீடியோவாக பார்க்க கிளிக் செய்க –  https://www.youtube.com/c/News7TamilPRIME

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D

மீனாட்சியம்மன் திருமணத்திற்கு வரும் அழகர்; மகிழ்வுடன் வரவேற்கும் மதுரை மக்கள்

EZHILARASAN D

சிப்காட் அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்

Web Editor