GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, நேற்ரு முன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போல ஏற்றம் கண்டுவந்த வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.