FCRA மசோதாவுக்கு எதிரான தீர்மானம் – சிபிஐ, அதிமுக கட்சிகள் ஆதரவு!

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ, அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026-ஐ (FCRA) அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் தனி தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பேசுகையில், “கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளிநாட்டு பங்காளிப்பு திருத்த மசோதா சட்டம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அது எதிர்நிலையில் பரிசினையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சட்ட திட்ட மசோதா சமூகநல மேம்பாட்டிற்காக வலு சேர்ப்பதில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பகுதி மக்கள் ஆதரவற்றவர்கள் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடைய கல்வி, மருத்துவம், பொருளாதார உயர்வுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற சமூக தன்னால்வார்கள் தொண்டு நிறுவனங்கள் சிறுபான்மையினர் கல்வி மருத்துவமனை வழியாக உதவி வழங்கிக் கொண்டிருக்கின்ற தன்னால் வளர்கள் அமைப்புகள் இன்றைக்கு மிகப்பெரிய அளவில் ஒடுக்குகின்ற சட்டமாக இன்றைக்கு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்ததை என் கட்சி எதிர்த்து என் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து உள்ளார்கள் அது இப்போது நாடாளுமன்றத்தில் பரிசீனையில் உள்ளது.

எனவே நாட்டினுடைய பண்புமிகு தன்மைக்கும் மதச்சார்பற்ற பண்புகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கின்ற இந்த நிறுவனங்கள் இந்த சமூக சங்கங்கள் தடுக்கக்கூடிய ஆயுதமாக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நம்மளுடைய முதலமைச்சர் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு திருத்த சட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை கண்டு கொண்டேன். 2010ல் இருந்து தற்போது வரை 25,000 மேற்பட்ட நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.ஆயிரக்கணக்கான சமூக சங்கங்கள் முடக்கப்படும் என்ற ஆபத்து இருக்கின்றது. இதற்கு முழு ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழங்குகிறது.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி:

FCRA தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா. FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா:

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு. தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு? FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.