தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026-ஐ (FCRA) அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் தனி தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில்பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் பேசியதாவது, “ FCRA வெளிநாடு பங்களிப்பு திருத்த சட்டத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆதரிக்கவில்லை. எஃப் சி ஆர் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் சில திருத்தங்கள் வேண்டும் என்று சொல்லுங்கள். அறக்கட்டளைக்கு என் ஜி ஓ வரக்கூடிய நிதிகளை சரியான கணக்கு வழக்கோடு செயல்படுத்துவதற்கு தான் இந்த சட்டம்
நல்ல காரியங்களுக்கு வரக்கூடிய பணத்தை மத்திய அரசு என்றும் தொந்தரவு செய்யாது
எஃப் டி ஆர் மூலம் வரும் பணத்தை நல்ல காரியங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும் தேசத்திற்கு எதிராக செயல்படுத்தக்கூடாது என்பதற்காக பாஜக இந்த சட்டம் கொண்டு வந்துள்ளது இந்த திருத்தம் அவசியமானது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்தார்.




