கீவ்நகரில் வசிக்கும் மக்கள் வெளியேற எச்சரிக்கை: ரஷ்ய ராணுவம்

உக்ரைன் – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்நகரில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.   உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு…

உக்ரைன் – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்நகரில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

 

உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. போரை தொடர்ந்து நடத்தினாலும், பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகள், உள்நாட்டில் இருந்து வரும் அழுத்தங்களால் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா ஒப்புக்கொண்டது. அதன்படி, பேச்சுவார்த்தைக்காக பெலாரசில் தமது தூதுக்குழு உக்ரைனின் வருகைக்காக காத்திருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.


இதனை தொடர்ந்து ரஷ்யாவின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி உக்ரைன், தமது குழுவை பெலாரசிற்கு அனுப்பியதை உறுதி செய்தது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள உக்ரைன் குழு உக்ரைன் பேச்சுவார்த்தை குழு பெல்லாரஸ் நாட்டுக்கு வந்தடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது பெலாரஸ் சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைனில் ரஷ்ய படையினர் தாக்குதலை குறைத்து கொண்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கார்கீவ் நகரில் தாக்குதலுக்கான அபாய ஒலி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் கீவ்நகரில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், வணிக வளாகம் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.