முக்கியச் செய்திகள் தமிழகம்

வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம் உருவாக இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் பிளாஸ்டிக் மாசுபாடு ஒழிப்பு குறித்து விவாதிக்க ஐநா சுற்றுச்சூழல் பேரவை மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டில், பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற பிற நாடுகளின் நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றமளிப்பதாக அன்புமணி தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிளாஸ்டிக் ஒப்பந்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மூன்று வகையான வரைவுகள் இந்த மாநாட்டில் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ருவாண்டா, பெரு நாடுகளின் வரைவு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினார்.இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது வரைவில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அன்புமணி குறிப்பிட்டார்.

இந்த வரைவை இந்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு, ருவாண்டா மற்றும் பெரு ஒப்பந்தத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.தமிழ்நாடு அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்து, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசியலிலிருந்தே ஒதுங்குகிறேன்: சசிகலா

Niruban Chakkaaravarthi

புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடக்கிறதா? – நாராயணசாமி கேள்வி

Web Editor

பரந்தூர் விமான நிலையம் – சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

EZHILARASAN D