பாராம்பரிய தற்காப்பு கலைகளை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம்- அமைச்சர்

அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளை மீண்டும் மெருகூட்ட மற்றும் அடுத்த…

அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளை பாதுகாக்க ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளை மீண்டும் மெருகூட்ட மற்றும் அடுத்த தலைமுறைக்கும் பயிற்றுவிக்க அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான தற்காப்பு கலை பயின்றுனர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றானது களரி. இந்த தற்காப்பு கலையை மீண்டும் மெருகூட்டி அடுத்த தலைமுறைக்கும் பயிற்றுவிக்கும் விதமாக குமரியில் தற்காப்பு கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க அமைச்சர் மனோதங்கராஜ் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் முதல் முயற்சியாக அமைச்சர் தலைமையில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது, இதில் ஏராளமான தற்காப்பு கலை பயிற்றினர்கள் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்கள் விளக்கங்களை அளித்தனர்.தொடர்ந்து அடுத்த கட்டமாக இந்த கலைகளை பயிற்றுனர்களை கொண்டு ஆவணப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக பயிற்சியாளர்கள் கூறி உள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.