காதல் விவகாரத்தில் தவறான முடிவு எடுக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீட்பு!

திருப்புவனத்தில் 12-ஆம் வகுப்பு மாணவரும், மாணவியும் தவறான முடிவு எடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் அபிமன்யு தனியார்ப் பள்ளியில் 12-ஆம்…

திருப்புவனத்தில் 12-ஆம் வகுப்பு மாணவரும், மாணவியும் தவறான முடிவு எடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் அபிமன்யு தனியார்ப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் மாணவன் அபிமன்யு விஷம் அருந்தி தவறான முடிவுக்கு முயற்சி செய்துள்ளார். இதற்குச் சற்று முன்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி யாஷிகா பள்ளி இரண்டாவது தளத்திலிருந்து குதிக்க முயன்றுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘இலங்கை துறைமுகம் வந்தடைந்த சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!’

இந்நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவன் அபிமன்யு தனியார்ப் பள்ளியில் விஷ அருந்தி தவறான முடிவுக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில், யாஷிகாவும் மாணவன் அபிமன்யு ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், டியூஷன் செல்லும் பொழுது பழக்கம் ஏற்பட்டுக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.