தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்குகளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மீட்டனர்.
தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு அரிய வகை இனத்தைச் சேர்ந்த 4 குரங்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில், பாங்காக்கில் இருந்து வந்த ஒரு பயணியை அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டனர்.
இதையும் படிக்க: சர்வதேச மகளிர் தினம்; சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்
அப்போது, அந்தப் பயணி அரிய வகையைச்சேர்ந்த 4 குரங்குகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்த குரங்குகளைப் பயணியிடம் இருந்து பறிமுதல் செய்தனர் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வனவிலங்கு குற்றத் தடுப்பு பணியகத்தின் வனவிலங்கு ஆய்வாளரால் சான்று அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







