குழந்தை தொழிலாளர்களாக பணியாற்ற வந்த சிறுவர்கள் மீட்பு

தமிழ்நாட்டிற்கு குழந்தை தொழிலாளர்களாக பணியாற்ற வந்த வெளிமாநில சிறுவர்களை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார் அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.   சென்னையில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம்,தஞ்சை வழியாக திருச்சி வரும் சோழன்…

தமிழ்நாட்டிற்கு குழந்தை தொழிலாளர்களாக பணியாற்ற வந்த வெளிமாநில சிறுவர்களை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார் அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

 

சென்னையில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம்,தஞ்சை வழியாக திருச்சி வரும்
சோழன் விரைவு ரயில் நேற்று திருச்சி இரயில் நிலையத்திற்கு வந்து சோ்ந்தது. அப்போது ரயில்நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் உள்ளவா்களை ரயில்வே பாதுகாப்பு
படையினா் மற்றும் ரயில்வே அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி கொண்டிருந்த போது
சந்தேகப்படும் படியாக இருந்த சிறுவா்களை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனா்.

இதில் உத்திர பிரதேசத்தை சோ்ந்த ராமன்சிங் , பீகாரை சோ்ந்த விஷால்
என்ற சிறுவா்கள் என்பது தெரியவந்தது, அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்
அவா்கள் சுயத்தொழில் செய்ய திருச்சி வந்ததாக கூறியதையடுத்து – அவா்களை மீட்டு
குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள ஊழியா்களிடம் ஒப்படைத்தனா்.
தொடர்ந்து அந்த சிறுவா்களின் பெற்றோர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை
சேகரித்து வருகின்றனா்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு குழந்தைத் தொழிலாளர்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அரசு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பீகார், ஒரிசா, போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் கடுமையான தொழில்களில்  நகர்புறங்களில் கான்ராக்ட் முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்த கூடாது என சட்டங்களும்,  விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப் பட்டாலும், நாளுக்கு நாள் வெளிமாநிலங்களில் இருந்து குழந்தை தொழிலாளர்களாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  திருச்சி இரயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரிசாவை சேர்ந்த மூன்று சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக வந்த போது இதே போன்று  திருச்சி இரயில்வே போலீஸாரால்  மீட்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.