காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 80…

காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 80 சதவீதம், திமுகவிற்கு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 30 முதல் 40 சதவீத இடங்களில் அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதிமுகவில் தலைமை இல்லாததே இதற்குக் காரணம் என குறிப்பிட்டார். பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து விட்டதாகத் தெரிவித்த ஐ. பெரியசாமி, காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமம் ஆகிவிடும் என்று தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: சிறப்பான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி: தவாக தலைவர் வேல்முருகன்

இதேபோல, மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்டதை சட்டப்படி எதிர்கொள்வோம் என தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கட்சியின் தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.