பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: திருச்சி- ராமேஸ்வரம் ரயில், மண்டபத்தில் நிறுத்தம்!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில்…

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய ரயில் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது.

ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில் பாலம். நூறு வருடங்களை கடந்து கம்பீரமாக இருக்கக்கூடிய தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஏற்பட்ட பழுதால் காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு வரவேண்டிய ரயில், மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் மண்டபத்திலேயே இறக்கி விடப்பட்டனர்.

மேலும் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதை முழுமையாக சரிசெய்த பின்பு பாம்பன் பாலம் வழியாக ரயில்களை இயக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா காரணமாக, ராமேஸ்வரத்தில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திற்கு செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் இயக்கப்படாமல் இருக்கும் நிலையில், தினமும் மாலை ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்ல வேண்டிய ஒரு ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. ஆனால் இந்த பழுது காரணமாக அந்த ரயிலும் சென்னை செல்லுமா? என்பது தெரியவில்லை.

எனவே, ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பழுதை சரிசெய்ய வேண்டும் என அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.