பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்து போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் கே.கே.சி பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 14 ஆயிரத்து 507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பாலு 70,618 வாக்குகளைப் பெற்றார்.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளார் பாலு. தனது மனுவில், மின்னணு வாக்குப்பதிவில் சில குறைபாடுகள் இருந்ததாகவும் அதனை சுட்டிக்காட்டிய போது நிவர்த்தி செய்யவில்லை எனவும், வாக்கு எண்ணிக்கையிலும் சில தவறுதல்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







