அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை தலைவா் கெவின் மெக்காாத்தியை அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கு மேலவையான செனட் சபையில் மட்டுமே அவரது கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.
கீழவையான பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அவையில் அந்தக் கட்சிக்கு 221 இடங்களும், ஜனநாயகக் கட்சிக்கு 212 இடங்களும் உள்ளன.
எனவே, பிரதநிதிகள் சபையின் தலைவராக குடியரசுக் கட்சியைச் சோந்த கெவின் மெக்காாத்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனார் அவரது தேர்வுக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர் மென்மையான போக்கை கடைபிடிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அரசின் கடன் வரம்பை அதிகரிப்பதற்கான ஒப்புதலை நாடாளுமன்றம் அளிப்பதில் கடந்த மே மாதம் பிரச்னை எழுந்தது. ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கடைசி நேரத்தில் கடன் வரம்பை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தை கெவின் மெக்காா்நிறைவேற்ற உதவினார்.
இருந்தாலும், ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கடைசி நேரத்தில் கடன் வரம்பை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்ற கெவின் மெக்காாத்தி உதவினார். இதனால் அவர் மீதான அதிருப்தி அதிகரித்தது.
இந்நிலையில், கெவின் மெக்காாதியை நீக்கும் தீாமானத்தை அவையில் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 216 வாக்குகளும், எதிராக 210 வாக்குகளும் பதிவாகின. மெக்காா்த்தியின் குடியரசுக் கட்சியைச் சோந்த 8 உறுப்பினா்கள் தீாமானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடாந்து அது நிறைவேறியது.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அவைத் தலைவா் பொறுப்பிலிருந்து அவை உறுப்பினாகளால் கெவின் மெக்கொத்தி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.







