ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக ஊழியர்கள் திரும்ப அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் வரும் ஜனவரி 16ம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான செயல்விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, கடிதம் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்த பதவிகளில் யாரும் இல்லை எனக்கூறி, அக்கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கே அதிமுக தலைமை அலுவலக ஊழியர்கள் திரும்ப அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.