புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரங்களில் உள்ள வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் வகையில் முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
72 தொகுதிகளைச் சார்ந்த பதிவு செய்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை பற்றி விளக்கம் அளிக்க, ஜனவரி 16ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஏறத்தாழ 30 கோடி மக்கள் வாக்களிக்காத நிலை காணப்பட்டது. புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வாக்களிக்க முடியாததும் இதற்கு காரணம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் வாக்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.