புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை
எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும்
மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு
செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் இருந்தது. மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு
அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கம் செய்ய பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டிவையும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் நேற்று இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து
சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி
தலைமையில் நடைபெற்றது.
இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும்
அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வழிபடுவதற்கும்
பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது இரட்டை குவளை முறை குறித்து உண்மை
தன்மை குறித்து ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்வு
காணப்பட்டது.
மேலும் இன்று அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து
வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பட்டியல் அனைத்து மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்ய நாதன், நடக்க கூடாத
சம்பவம் நடந்து விட்டது மனிதக் கழிவுகளை தொட்டியில் கலந்தது என்பது
கண்டனத்திற்குரியது உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டியல் அனைத்து மக்கள் பயன்படுத்துவதற்காக புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி நாளை தொடங்கி 20 தினங்களுக்குள் பணிகள் முடிவு பெற்று பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது. வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வரின் விருப்பம் என்றார்.
இதற்கு பின்னர் பல ஆண்டு காலமாக கோயிலில் வழிபடாத பெண்கள் இன்று வந்து
வழிபட்டது குறித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு இதுபோன்று
வழிபடும் நிகழ்வு என்பது தொடர்ந்து நடைபெற வேண்டும். இன்று மட்டும் நடக்கும்
நிகழ்வாக இருந்துவிடக் கூடாது இதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்
கொண்டனர்.