மத்திய பிரதேசத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட கொரோனா நோயை குணப்படுத்தும் ரெம்டிசிவர் மருந்தை விற்க முயன்ற மூவரை அம்மாநில சிறப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ரெம்டிசிவர் மருந்து முக்கியமானதாகும். இந்த வகையான மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ரெம்டிசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ராஜேஷ் பாட்டிதர், ஞானேஷ்வர் பாஸ்கர், அனுராக் சிங் சிசோடியா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 ரெம்டிசிவர் மருந்துகள் கைப்பற்றப்பட்டது. இந்த மருந்துகளில் எம்ஆர்பி விலை குறிப்பிடாத நிலையில் ஒரு மருந்தை ரூ.20 ஆயிரம் வரை விற்க அவர்கள் முயன்றுள்ளனர்.
ரெம்டிசிவர் மருந்துகள் தொடர்ந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. ரெம்டிசிவர் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை தடுக்க மத்திய அரசு கைது நடவடிக்கைகளை தூரிதப்படுத்தவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.