அஜீரண கோளாறுக்கான தீர்வுகள்!

அஜீரண கோளாறால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள்  குறித்து இந்த பதிவில் காணாலம். இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுகள், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதது, காலை நேரங்களில் உணவுகளை தவிர்ப்பது போன்ற…

அஜீரண கோளாறால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள்  குறித்து இந்த பதிவில் காணாலம்.

இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுகள், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதது, காலை நேரங்களில் உணவுகளை தவிர்ப்பது போன்ற பல காரணங்களால் பலரும் அஜீரண கோளாறால் சிரமப்பட்டுவருகின்றனர். இந்த பதிவில் அஜீரண கோளாளறு எவ்வாறு ஏற்படுகிறது, அதனை குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

அஜீரண கோளாறு

வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறு மருத்துவத் துறையில் டிஸ்பெப்சியா (dyspepsia) என அழைக்கப்படுகிறது. சரியாக சாப்பிடாதவர்கள், ஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிறு உப்புசமாக உணர்ந்தாலோ, வயிறு வலித்தாலோ அஃது அஜீரணமாக இருக்கலாம்.

அஜீரணம் ஏற்பட பல காரணிகள் உண்டு. காரமான உணவு, சாப்பிட்டவுடன் படுப்பது, மன இருக்கம், பதற்றம், மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவை அஜீரணம் ஏற்பட காரணிகளாக உள்ளன.

இரைப்பைப் புற்றுநோய் (stomach cancer), இரைப்பை அழற்சி (gastritis), குடற்புண் (peptic ulcers), பித்தப்பைக் கல் (gallstones), கணைய அழற்சி (pancreatitis) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அஜீரணத்திற்கான அறிகுறிகள்

வாய் குமட்டுதல்
வாய் துர்நாற்றம்
வயிற்று வலி
நெஞ்செரிச்சல்
வாய் புளித்தல்
வயிற்றுப்போக்கு
பசியின்மை
வாயு தொல்லை
வயிறு உப்புசம்

அஜீரணத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம்

இஞ்சி: உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும். இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

எலுமிச்சை: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.

புதினா: குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுவதுடன் வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் பருகலாம்.

சமையல் சோடா: வயிற்று அமிலத்தை சமன் செய்ய சமையல் சோடா உதவும். அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம் தரும். நாளுக்கு ஒருமுறை ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடாவை தண்ணீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.

நெல்லிக்காய்: நாளுக்கு ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும்.

மருத்துவர் அறிவுரை

அஜீரண கோளாறு குறித்து ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபெக்கா கூறுகையில், இரவில் தாமதமாகச் சாப்பிடுவது அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். உடல் பருமன் அதிகரிக்க அஜீரண கோளாறுகள் முக்கிய காரணம். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். சமைத்த உணவோடு சமைக்காத உணவுப் பொருட்களை (Salads) சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. காலை உணவாக முளைக் கட்டிய பயறு, டிரை ஃப்ரூட்ஸ் உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவது சிறந்தது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சூப், கஞ்சி உள்ளிட்ட நீர் ஆகாரம் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.