வெளியானது கேங்ஸ்டா பாடல்; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

’சில்லா சில்லா’ ’காசேதான் கடவுளடா’  பாடல்களின் கொண்டாட்டமே இன்னும் ஓயாத நிலையில், துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில்…

’சில்லா சில்லா’ ’காசேதான் கடவுளடா’  பாடல்களின் கொண்டாட்டமே இன்னும் ஓயாத நிலையில், துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா வெளியானது.

நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படம் துணிவு.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படும் இந்த படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ”சில்லா சில்லா” என்ற படத்தின் முதல் பாடலை கடந்த டிசம்பர் 9ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்ற இப்பாடல், இன்றும் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.

அதை தொடர்ந்து துணிவு படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ’காசேதான் கடவுளடா’ என்ற பாடலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று  7 மணிக்கு துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா வெளியானது. இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

’சில்லா சில்லா’ ’காசேதான் கடவுளடா’  பாடல்களின் கொண்டாட்டமே இன்னும் ஓயாத நிலையில், துணிவு படத்தின் மற்றொரு பாடல் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சநிலையை அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.