முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுத்தையின் உடலில் புள்ளிகள் மாறினாலும் ஆர்எஸ்எஸ் கொள்கை மாறாது -திருமாவளவன்

சிறுத்தை தன் உடலில் இருக்கும் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் ஆர்எஸ்எஸ்,
சங்பரிவார்கள் அமைப்புகள் தங்கள் கொள்கைகளை, சிந்தனைகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என திருமாவளவன் தெரிவித்தார்.

கீழ்வெண்மணி பகுதியில் 1968 இல் கூலி உயர்வு கேட்ட 44 பேர் உயிரோடு
எரித்துக்கொல்லப்பட்டனர், அந்த தியாகிகளுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சகோதரத்துவத்தை போதித்த ஒரு மகத்தான கோட்பாடு தான் கிறிஸ்தவம், உலகம் முழுவதும் இன்று சகோதரத்துவத்தை பேணி பாதுகாத்து வருகிற கிறிஸ்தவத்தை கிறிஸ்தவ சமுதாயத்தை தாண்டிய ஜனநாயக சக்திகள் அனைவரும் போற்றுகின்றனர். அத்தகைய கிறிஸ்தவத்தை, ஏசுவை பின்பற்றும் கிருஸ்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் என்றார்.


தொடர்ந்து, 1968 டிசம்பர் 25 ஆம் தேதி தமிழகத்தின் துயரம் படிந்த நாள் தமிழக
அரசியல் ,சமூக வரலாற்றில் களங்கம் நிறைந்த ஒரு நாள். கூலி உயர்வு கேட்டு போராடிய கூலி விவசாய பெருங்குடி மக்களை குடிசைக்குள் தள்ளி தீ வைத்து கொளுத்திய கொடூரம் அரங்கேறிய அவல நாள். 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். வெறும் கூலி உயர்வு போராட்டம் மட்டுமல்ல நிலப்பிரபத்துவ பண்ணை ஆதிக்கத்துக்கு, சாதி வெறிக்கு எதிரான சாதிய நில உடைமை ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிச இயக்கத்தின் துணையோடு மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய களத்தில் அவர்கள் சாம்பலாக்கப்பட்டார்கள் என்றார்.

அரை நூற்றாண்டை கடந்த பிறகும் அதே நிலபிரபத்துவ ஆதிக்கமும், சாதி வெறியாட்டமும் இன்னும் இந்த மண்ணில் இந்தியா முழுவதும் தொடர்வது வேதனைக்குரியது வெட்கக்கேடானது. இந்தியா முழுவதும் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன. சங்பரிவார்கள் அதை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது இந்த நிலையில் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் அது முன்மொழியை கூறிய சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களை பாதுகாக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம் என கூரினார்.


கன்னியாகுமரி அருமனையில் நடந்த விழாவில் சங்பரிவார் அமைப்பை ஏன் எதிர்க்கிறோம் என்று பேசி இருந்தேன், சங்பரிவார்களை விமர்சித்தால் இந்துக்களுக்கு எதிராக இருக்கிறோம் என்று அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்கள். அவர்கள் கொள்கைகளை தான் எதிர்க்கிறோம், அவர்கள் மதச்சார்பின்மை, சகோதரத்துவம் , சமத்துவத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என கூறினார்.

அவர்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டு சமூகநீதி, சகோதரத்துவம், சமத்துவம்,
மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகளுக்கு ஆதரவாக பேசினால் அவர்களை
விமர்சிக்கபோவதில்லை, அப்படி கொள்கைகளை மாற்றிக் கொண்டால் அவர்களோடு நட்புறவு கொண்டு கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை என்று சொன்னேன் அதற்குப் பொருள் அவர்களுடன் கூட்டணி வைக்க வேட்க்கையோடு இருக்கிறோம் என்று அர்த்தம் அல்ல, கொள்கைகள் மோசமானது அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முன் நிபந்தனையாக தான் குறிப்பிட்டேன் என்றார்.


சிறுத்தை தன் உடலில் இருக்கும் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் ஆர்எஸ்எஸ்,
சங்பரிவார்கள் அமைப்புகள் தங்கள் கொள்கைகளை, சிந்தனைகளை மாற்றிக் கொள்ள
மாட்டார்கள் அதை அம்பலப்படுத்த தான் பேசினான். நாடாளுமன்ற தேர்தலுக்கு அவசரம் எதுவும் இல்லை திமுக தலைமையிலான கூட்டணியில் கட்டுகோப்பாக, ஒற்றுமையாக இருக்கிறோம் சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு ஒன்றுபட்டு செயல்படுகிறோம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் கைது

Jeba Arul Robinson

முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்: சி.டி.ரவி

Niruban Chakkaaravarthi

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

Jayasheeba