முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் -முத்தரசன்

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் பொங்கல் பரிசு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர்
மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 98 வது அமைப்பு தின
செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன்
நினைவகத்தில் இருந்து துவங்கிய பேரணி பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான அரசு கடை வீதியில் நிறைவடைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து அரிசி கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மட்டுமல்லாது தமிழக முழுவதும் மக்களை திரட்டி மத்திய அரசு மற்றும் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டும் வகையில் போராட்டங்கள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் , திமுக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வகையில் தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் , தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும் இதனால் தொடர்ந்து தமிழகத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார் .

மேலும் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டிய ஆளுநர் வெளிப்படையாகவே இந்தியா இந்துக்களின் நாடு என பேசி வருவதாகவும் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்து வருகின்ற 29ஆம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு உடனடியாக ஆளுநரை திரும்ப பெற்றிருக்க
வேண்டும் ஆனால் திரும்ப பெறாததன் காரணமாக இது ஒன்றிய அரசுக்கு எதிரான
போராட்டமும் ஆகும் என தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசின் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அறிவித்தது வரவேற்கத்தக்க வகையில் அமைந்திருந்தாலும் கூட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கடந்த ஆண்டு போல கரும்பு, தேங்காய் , முந்திரி திராட்சை உள்ளிட்ட பொருட்களை வழங்க தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென கனமழை பெய்த நிலையிலும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து மேடையில் நின்றவரே உரையாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்

EZHILARASAN D

’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!

EZHILARASAN D

’காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல’ – ஒமர் அப்துல்லா ஆவேசம்

Web Editor