மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118…

நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசால் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. மறு அறிவிப்பு வெளியிடும் வரை குளிக்க தடை..

மணிமுத்தாறு அணை திறப்பின் மூலம் 23,152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிக்காக  நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை 82 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அணையின் பெருங்கால் மூலம் திறந்து விடப்படும் இந்த தண்ணீர் மணிமுத்தாறு, வீரவநல்லூர் முதல் திசையன்விளை சாத்தான்குளம் வரை உள்ள பல்வேறு குளங்களுக்கும் 23,152 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.