நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர், இசையமைப்பாளர், டைரக்டர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன் 1 படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சைத்தான், யமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார்.
அண்மையில் பெரிதும் எதிர்பார்க்கப்பபட்ட பிசைக்காரன் 2 வெளியானது. விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மேகம், வள்ளிமயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கொலை படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அதன் போஸ்ட் புரடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொலை திரைப்பட்ம் ஜூலை 21ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதுதொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. . இதனை விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.






