விளையாத் புத்தா படப்பிடிப்பின் போது பலத்த காயமடைந்த நடிகர் பிருத்விராஜ் தன் உடல்நலம் குறித்து இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் பிருத்விராஜ். மேலும், தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார். பிரித்ராஜ் இதுவரை 88 திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது ஜெயன் நம்பியார் இயக்கி வரும் ‘விளையாத் புத்தா’ என்ற மலையாள படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மறையூரில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், படத்தின் சண்டைக்காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்ட நிலையில், திடீரென கீழே விழுந்ததில் பிருத்விராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து, முதலுதவி அளிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிருத்விராஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பிரித்விராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாகவும் சில மாதங்கள் ஓய்வு தேவைப்படும் என்று கூறியதோடு தனக்காக அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.







