மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாளை இணையவழி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாளை இணையவழி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமால் இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு இணையவழி மூலம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுகவின் அனைத்து செயலாளர்களுடன் இன்று அலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.