விருதுநகர் மாவட்டம் பணிமனையில் உள்ள நகர பேருந்துகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவுதலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மூன்று மாதங்களுக்கு மேலாக விருதுநகரில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் துவங்கி உள்ளதால் பேருந்துகளை இயக்க தமிழக அரசு தளர்வுகள் அளிக்க வாய்ப்பிருப்பதால் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்துகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதில் பணிமனையில் உள்ள 74 நகர் பேருந்துகளை பராமரிக்கும் பணியில் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மற்றும் வாகன பழுது நீக்கும் நபர்கள் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்துகள் அனைத்தும் ஓட்டுனர்கள் இயக்கப்பட்டது அதிலுள்ள குறைகளை கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.







