கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆம்போடெரிசின் வகை மருந்துகளைக் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட், லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளுடன், பொசகோனசோல் (Posaconazole), இஸவுகோனசோல் (Isavuconazole) ஆகிய மருந்துகளைக் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்போடெரிசின் வகை மருந்துகளை…

ஆம்போடெரிசின் வகை மருந்துகளைக் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட், லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளுடன், பொசகோனசோல் (Posaconazole), இஸவுகோனசோல் (Isavuconazole) ஆகிய மருந்துகளைக் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல், இஸவுகோனசோல் மருந்துகளைப் பயன்படுத்தலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கருப்பு பூஞ்சை நோயைத் தடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண் எரிச்சல், பல் வலி, தலைவலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 900க்கும் அதிகமான நபர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா மருந்துகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டது. குறிப்பாகக் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.