உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை அடுத்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பாக, 100 சதவீத வெற்றியை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை தாம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். தனது கோரிக்கையை ஏற்று, மக்கள் முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழே இந்த தேர்தல் வெற்றி என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாபெரும் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். தமிழகத்தில் தற்போதுள்ள திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த தேர்தல் வெற்றியைப் பார்ப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், மக்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு திமுக சிறப்பான ஆட்சியை அளிக்கும் என உறுதி அளிப்பதாகக் குறிப்பிட்டார்
அதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்பது மாத கால ‘#DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த #UrbanLocalBodyElection முடிவுகள்!வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்! மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்”.! எனப் பதிவு செய்துள்ளார்.
http://“ஒன்பது மாத கால ‘#DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த #UrbanLocalBodyElection முடிவுகள்!வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்! மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்”.! எனப் பதிவு செய்துள்ளார்.







