பாலிவுட் சினிமாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

பாலிவுட் சினிமா மோசமான தோல்விகளை சந்தித்து மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.கொரோன தாக்கத்திற்கு பிறகு எந்த ஹிந்தி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறது.கதைக்களம்,பான் இந்திய சினிமாக்களின் வளர்ச்சி போன்றவை பாலிவுட்டின்…

பாலிவுட் சினிமா மோசமான தோல்விகளை சந்தித்து மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.கொரோன தாக்கத்திற்கு பிறகு எந்த ஹிந்தி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகிறது.கதைக்களம்,பான் இந்திய சினிமாக்களின் வளர்ச்சி போன்றவை பாலிவுட்டின் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

இவை ஒருபுறம் இருக்க பாய்காட் என்ற சொல்லும் பாலிவுட் சினிமாமை மோசமாக அச்சுறுத்துகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு அமீர் கான் பேசிய கருத்திற்காக தற்போது அவரது படம் லால் சிங் சத்தாவை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.பாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் தழுவலாக உருவாகியுள்ள லால் சிங் சத்தா விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற போதிலும்,வாடா இந்தியாவில் பெரும்பாலான திரையரங்குகள் காலியாக உள்ளன.

லால் சிங் சத்தா படத்தை பார்த்த ஹ்ரித்திக் ரோஷன் அந்த படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார். நிறை குறைகளை கடந்து இது அனைவரும் பார்க்க வேண்டிய பொக்கிஷம் என தெரிவித்தார்.இதனால் தற்போது இவர் நடிக்கும் படமான விக்ரம் வேதாவை புறக்கணிக்க வேண்டும் ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.சக நடிகரின் படத்தை பாராட்டியதற்காக இவர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பேசப்படுவது மோசமானது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதவிர பல்வேறு காரணங்களுக்காக ஷாருக்கானின் பதான்,ரன்பிர் கபூரின் பிராம்ஷ்ட்ரா,அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டு கிடைக்கும் பாலிவுட் திரை உலகை இந்த பாய்காட் குரல்கள் மேலும் மோசமான சூழலுக்கு இட்டு செல்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.