சித்தாந்தத்தை பற்றி குறிப்பிடும் அண்ணாமலை எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு சௌகரியத்திற்காக பாஜகவில் இணைந்தார் என சாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சவாரி செய்யலாம் என யோசித்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார் என குறிப்பிட்டார். சித்தாந்தத்தை பற்றி குறிப்பிடும் அண்ணாமலை எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் என்பதை விளக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் சொல்லும் புள்ளிவிவரம் மத்திய நிதி அமைச்சருக்கு எரிச்சலை மூட்டுகிறது. மத்திய அமைச்சர் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் புள்ளி விவரங்களால் மட்டும் பதில் சொல்ல வேண்டும். அதைவிடுத்து தேசியக் கொடி கட்டிய காரின் மீது காலனி வீசியது அனாகரிகம் தான் அதை வன்மையாக கண்டிக்கின்றேன் என கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
– இரா.நம்பிராஜன்