வாரிசு படத்தின் சில நொடி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
விஜய் நடிக்கும் 66வது படமான வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அவரின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியானது. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. வாரிசு படத்தின் படபிடிப்பு இரண்டு கட்ட படபிடிப்பு நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படபிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய், சரத்குமார் மற்றும் பிரபு இருக்கும் சில நொடி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. வாரிசு திரைப்படத்தின் காட்சிகள், புகைப்படங்கள் அவ்வப்போது டிவிட்டரில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படகுழு அதிர்ச்சி அடைந்துள்ளது.







