தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதுதான் குரூப் 2 தேர்வில் குளறுபடி ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.
குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்ப்பட்ட குளறுபடி டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. தேர்வர்களுக்கு பதிவெண்ணுடன் ஒதுக்கப்பட வேண்டிய வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற முதன்மை தேர்வில் குளறுபடி குறித்து இன்னும் சற்று நேரத்தில் டிஎன்பிஎஸ்சி செயலாளர், தேர்வுக்கட்டுபாட்டுத்துறை அலுவலர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். அடுத்துவரக்கூடிய தேர்வுகளில் இம்முறை நடைபெற்ற குளறுபடிகளை தடுக்க ஆலோசிக்கபட உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2ல் நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வை 55ஆயிரத்து 71 பேர் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்வை எழுதினர். இதில் வினாத்தாளில் இருக்கின்ற பதிவெண்ணுடன் கூடிய வினாத்தாள்கள் தேர்வர்களுக்கு முறையாக வழங்கப்படாமல் மாறி மாறி வழங்கப்பட்டு குளறுபடி ஏற்பட்டது.
அண்மைச் செய்தி : குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வட்டாரத்தில் விசாரித்தபோது வினாத்தாள்கள் அச்சடிக்கும் நிறுவனங்கள் அவுட்சோர்சிங் விட்டதும் அங்கு தேர்வர்களுக்குரிய பதிவெண் வரிசைப்படி வினாத்தாள்களை அடுக்காமல் விட்டதும் அதனை அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுபாட்டு துறை ஆய்வு செய்யாமல் தேர்வு மையங்களுக்கு வினாத்தாளை அனுப்பியதுமே இதுவே கடந்த சனிக்கிழமை அன்று தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட காரணம் என டிஎன்பிஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








