“ரியல்மி சி30” ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று 12.30 மணி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் ஃபிரெண்ட்லியான வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஃபிலிப்கார்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பாம்பூ கிரீன் மற்றும் லேக் புளூ கலரில் இந்த ஸ்மார்ட்போன்…

ரியல்மி சி30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று 12.30 மணி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஃபிரெண்ட்லியான வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஃபிலிப்கார்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பாம்பூ கிரீன் மற்றும் லேக் புளூ கலரில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 32 ஜிபி ரோம் மற்றும் 2ஜிபி ரேம் கொண்ட மொபைல் 7,499 ரூபாய்க்கும், 3ஜிபி ரேம் வசதியுடைய மொபைல் ரூ. 8,299க்கும் விற்பனையாகி வருகிறது.

unisoc T1612 பிராசஸர் கொண்டது. மேலும், இந்த ஸ்மார்ட் போனில் முன்புற கேமரா 5 எம்பி மற்றும் பின்புற கேமரா 8எம்பி வசதிகளைக் கொண்டுள்ளது. 6.5 இன்ச் HD+ LCD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி திறன் கொண்டது. நாள் முழுவதும் பேட்டரி நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.