முக்கியச் செய்திகள் தமிழகம்

உக்ரைன் குழந்தைகளுக்காக நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிக்கையாளர்

மனிதநேயத்திற்கு எல்லைகள் கிடையாது, அது எதிரியிடமும் பகைமை பாராட்டாது என்பதை உணர்த்தும் வகையில்  ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே நடைபெற்ற போரும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் உலகம் அறிந்ததே. ரஷ்யா படைகள் வீசிய குண்டு மழையால் உக்ரைன் உருக்குலைந்தது. 100 நாட்களை கடந்தும் போரின் உக்கிரம் குறையவில்லை. இதனால் உக்ரைனில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து அநாதைகள் ஆகியுள்ளனர். மேலும் போரினால் மேற்கொள்ளப்பட்ட புலம்பெயர்வினாலும் குழந்தைகள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் அறக்கட்டளைக்கு 5 லட்சம் டாலர் நிதி தருவதாக அறிவித்தார் ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையாளரான டிமிட்ரி மொராடோவ்.  ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையான நோவாவா கெசட்டேவின் நிறுவனர்களில் ஒருவரான டிமிட்ரி மொராடோவுக்கு கடந்த 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளரான மரியா ரெஸ்ஸாவுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை அவர் பகிர்ந்துகொண்டார்.   கருத்துச் சுதந்திரத்தை  நிலைநாட்ட,  உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் பாடுபட்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு டிமிட்ரி மொராடோவுக்கும், மரியா ரெஸ்ஸாவுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உலகின் உட்சபட்ச பரிசாக கருதப்படும் நோபல் பரிசையே ஏலத்தில் விட்டு உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டியுள்ளார் ரஷ்யரான டிமிட்ரி மொராடோவ். நோபல் பரிசுடன் வழங்கப்பட்ட 175 கிராம் கொண்ட தங்க பதக்கத்தை ஆன்லைன் மூலம் ஏலம் விடுவதை கடந்த ஜூன் 1ந்தேதி தொடங்கினார். பதக்கத்தை தங்கமாக பார்த்தால் அதன் மதிப்பு சுமார் 10 ஆயிரம் டாலர்தான் ஆ னால் அதில் இழையோடும் டிமிட்ரி மொராடோவின் மனித நேயம் விலைமதிப்பற்றது என்பதால் ஏலத்தொகை கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியாக 5.5 லட்சம் டாலர் அளவிற்கு அதாவது இந்தியா ரூபாயின் மதிப்பிற்கு சுமார் 43 கோடி ரூபாய் அளவிற்கு டிமிட்ரி மொராடோவின் நோபல் பரிசு ஏலம்போனது.   நோபல் பரிசை விற்று தான் அறிவித்ததைவிட அதிக தொகையை உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுவதற்காக கொடுத்தார் இந்த ரஷ்யர். மாற்றான் தோட்டத்திலும் மல்லிகை மொட்டுகள் கருகக் கூடாது என்கிற மனிதநேயத்தோடு, எல்லை தாண்டி உதவிக்கரம் நீட்டிய டிமிட்ரி மொராடோவின் செயலுக்கு பாராட்டுக்கள் குலிந்து வருகின்றன.

-இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு!

Saravana

அரசு பேருந்தில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு

Arivazhagan CM

இந்தியாவைத் தவிர வேறு யாரும் உதவவில்லை: இலங்கை பிரதமர்

Mohan Dass