இந்தியாவையே உலுக்கியுள்ள ரியல் ‘பிரேக்கிங் பேட்’ சம்பவம்; பிடிபட்ட 2500 கிலோ ’மெத்தபெட்டமைன்’ -வெளியான அதிர்ச்சி பின்னணி!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்பு…

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடற்படை இணைந்து 12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

மிகப்பெரிய சரக்கு கப்பலில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய நிறுவனம் ஒன்று போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கேரளா மாநிலம் கொச்சி அருகே கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை தடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தடுத்தனர்.

சோதனையில் 2500 கிலோ கொண்ட ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தென்மாநிலங்கள் வழியாக இவ்வளவு கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவது இதுவே முதல் முறை என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 3500 கிலோ மெத்தபெட்டமைன், 500 கிலோ ஹெராயின், 529 கிலோ ஆசிஸ் ஆயில் போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் இந்திய கடேலார பகுதிகள் வழியாக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் தலைமையிலான அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

2022 பிப்ரவரி மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடற்படையோடு இணைந்து ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 529 கிலோ ஆசிஸ், 221 கிலோ மெத்தபெட்டமைன், 13 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று 2022 ஆம் ஆண்டு ஈரானிய படகு மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக 6 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 2022 மற்றும் ஏப்ரல் 2023 ஆகிய மாதங்களில் 286 கிலோ ஹெராயின் மற்றும் 128 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டனர்.‘

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும இந்திய கடற்படையும் இணைந்து தொடர்ச்சியாக நடத்திய அதிரடி சோதனையில் தான் இது போன்ற ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.