முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ் சொல்வதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – ஓபிஎஸ் பதில்

முதலமைச்சரும் நானும் சந்தித்ததாகக் கூறுவதை நிரூபிக்கத் தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக தயாரா என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அரை மணி நேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது குற்றம் சாட்டினார். இந்த குற்றச் சாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பதிலளித்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை. முதலமைச்சருடன் 1 மணி நேரம் பேசியதாக கூறிய பழனிசாமிக்கு என்னுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டு உள்ளனர். முதலமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார். நிரூபிக்க வில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா?” என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்பு

Dinesh A

புதிய எழுச்சியுடன் சாதனை படைக்குது பாரதம் – அண்ணாமலை அறிக்கை

Dinesh A

தேனி : சிறுமி மரணம் – கிடைக்குமா நீதி?

Dinesh A