ஈழ தமிழர்களின் நலன்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச தயார் – திருமாவளவன் எம்பி

இலங்கையில் யார் அதிபராக வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு விரோதமாக இருப்பார்கள் என மதிமுக பொது செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சென்னை தியாகராய நகரில் ஈழ தமிழர் விடியல் மாநாடு…

இலங்கையில் யார் அதிபராக வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு விரோதமாக இருப்பார்கள் என மதிமுக பொது செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சென்னை தியாகராய நகரில் ஈழ தமிழர் விடியல் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த போது தடுத்து நிறுத்தாத இந்திய அரசு, தற்போது நிதிஉதவி அளிப்பது குறித்து கடும் விமர்சனம் செய்தார். இலங்கையில் யார் அதிபராக வந்தாலும், ஈழ தமிழர்களுக்கு அவர்கள் விரோதமாகவே இருப்பார்கள் எனவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேர்தல் அரசியலோடு ஈழ தமிழர் அரசியலை இணைத்து பார்க்க கூடாது என்று கூறினார்.
ஈழ தமிழர்களின் நலன்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. சிங்கள உழைக்கும் மக்களே வீதியில் இறங்கி போராடும் நிலையில் அங்குள்ள தமிழர்களின் நிலையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.