விமான நிலையங்களில் ஜன.1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு

ஜனவரி-1ம் தேதி முதல் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயமாக RTPCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப்7…

ஜனவரி-1ம் தேதி முதல் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டாயமாக RTPCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடுள்ளது.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப்7 வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கும், துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்-கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சுழற்சி முறையில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.