“நிறைய பட்டாசு வாங்கி வைங்க” என துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படம் துணிவு.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படும் இந்த படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் முதல் பாடகாள் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்ததோடு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.அந்த பதிவில், தற்போது சிலவற்றை பார்த்தேன். பட்டாசு வாங்கி வைத்து கொள்ளுங்கள். மேலும் கூடுதலாக நிறைய பட்டாசுகளை வாங்கி வைக்கவும்” என ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/nirav_dop/status/1608296522185347073?s=20&t=B3dw_snnTbB2QMbLiWImbw
இந்த ட்வீட்டை பகிர்ந்த ரசிகர்கள் பலரும் அவரின் பதிவை பகிர்ந்து வருகின்றனர். மேலும், படத்தின் டிரெய்லர் & படத்தின் சில காட்சிகளை பார்த்து விட்டு நிரவ் ஷா ட்வீட் செய்துள்ளதாக கூறி வருகின்றனர்.







