நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்கள் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வுக் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.…

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்கள் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வுக் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மும்பையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் இருந்தவாறு இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.பி.ஐ இயக்குநர் சக்தி காந்த தாஸ், கொரோனா பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், நமது நாட்டில், பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும் சக்தி காந்த தாஸ் கூறினார்.

கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்காக ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த சக்தி காந்த தாஸ், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகள் கடனுதவி வழங்க நபார்டு மற்றும் மற்ற வங்கிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.