சித்தா மருத்துவமனைகளை அமைக்க கோரி வழக்கு!

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர்…

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள், மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உதவுவதாகவும், கொரோனா பரவலை தடுக்க ஹோமியோபதி மருந்தான ‘ஆர்சனிக் ஆல்பம்’ பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தீர்வும், பக்க விளைவுகளையும் தரும் அலோபதி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய – மாநில அரசுகள், சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவல் தீவிரமாகியிருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.