முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள் வணிகம்

RBI அறிமுகப்படுத்தி உள்ள டிஜிட்டல் கரன்சியை கையாள்வது எப்படி?


தங்கபாண்டியன்

கட்டுரையாளர்

ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சி அதில் முதல் செயல்படும் விதம் குறித்த தகவல்களை பார்க்கலாம். 

இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் பணத்தில், அறிமுகமான முதல் நாளான நவம்பர் ஒன்றாம் தேதி 275 கோடி ரூபாய் அளவுக்கு பெரு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என கிளியரிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், நாடு முழுவதும் டிஜிட்டல் பணம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.சிங்கப்பூர் சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் பணத்தை வெளியிட்டது.வரும் நாட்களில் சீனா, ஐரோப்பிய நாடுகள்,பனாமாஸ் சிங்கப்பூர் நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.தற்போது கிரிப்டோ உள்ளிட்ட தனியார் டிஜிட்டல் பணங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக உள்ளது. அரசே வெளியிடும் டிஜிட்டல் பணத்தின் மீது நிதி பாதுகாப்பு கிடைக்கும்.

டிஜிட்டல் பணத்தை எளிதில் கையாளலாம். வங்கி கணக்கு அல்லது சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்வது போல தகுந்த ஆவனங்கள் வழங்கி டிஜிட்டல் பணத்திற்கான கணக்கு தொடங்கப்படும். எவ்வளவு பணம் வங்கி கணக்கில் உள்ளதோ, அதன் மதிப்பில் டிஜிட்டல் பணமாக பெறலாம். தேவைப்படும் போது முழுமையாகவோ, பகுதியளவோ பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் ஈடுபட கணக்கு எண் மற்றும் பாதுகாப்பான குறியீட்டு எண் கொடுக்கப்படும். அரசின் டிஜிட்டல் பணமாக இருப்பதால் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும்.

தொடக்க கட்டமாக மொத்த பரிவர்த்தனைகளை பெரு நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த முடியும்.அடுத்த மாதம் சில்லரை பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த முடியும்.

ஏற்கனவே அரசின் பீம், யுபிஐ நிதிச்செயலிகள் உள்ள நிலையில் , டிஜிட்டல் பணத்தை அரசு வெளியிடுவதால் , குறுகிய காலத்தில் அரசின் பணப்புழக்கம் கையாளும் திறன் மற்றும் குறுகிய கால கையிருப்பு அளவும் உயரும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஒன்பது வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பண சேவையை வழங்கும்

  • ரா.தங்கபாண்டியன் , நியூஸ் 7 தமிழ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்” – மநீம தலைவர் கமல் கோரிக்கை!

Halley Karthik

தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷாவுக்கு முன் ஜாமீன்!

Gayathri Venkatesan

மக்களை தேடி மருத்துவம்; அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

G SaravanaKumar