தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு…

தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.